கூட்டம் கூடும்... ஆனால் அது ஓட்டாக மாறாது: மதுரையில் செல்லூர் ராஜூ பேட்டி!

Meenakshi
Feb 25, 2026,04:59 PM IST

மதுரை: கூட்டம் கூடுவதை வைத்து ஒருவரின் பலத்தை முடிவு செய்ய முடியாது; கூட்டம் கூடும்; ஆனால் ஓட்டாக மாறாது என்று மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்துள்ளார்.


அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டம் கூடுவதை வைத்து ஒருவரின் பலத்தை முடிவு செய்ய முடியாது. கூட்டம் கூடும். ஆனால், அது ஓட்டாக மாறாது. சிவாஜி கணேசன், பாக்யராஜ், டி ராஜேந்தருக்கு கூட தான் பெண்கள் அதிக அளவில் கூடினார்கள். அவர்களால் வெற்றி பெற முடிந்ததா? விஜய்யும் அப்படித்தான்.. பாஜக தமிழகத்திற்கு அதிக நிதியினை தருகிறது. திருக்குறள் ஒலிக்க பாஜக தான் காரணம்.




இன்றைய சூழ்நிலையில் ஆளும் கட்சியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர். இதற்கு ஒரே தலைவர் நம்பிக்கை நட்சத்திரம் எடப்பாடி தான். எங்கள் கழக தொண்டர்கள் விறுகொண்டு எழுகின்றனர் என்றால் மக்கள்  வீறுகொண்டு எழுத்துள்ளனர் என்று அர்த்தம். எத்தனை முகம் வந்தாலும் அத்தனை முகங்களும் அடிபட்டு தான் போகும். 


களத்தில் நின்று உழைக்க வேண்டும். எங்கள் அண்ணன் எடப்பாடி களத்தில் நின்று உழைத்து வருகிறார். இதுவரைக்கும் அவர் சுமார் 200 தொகுதிகளுக்கு மேல் மக்களை சந்தித்துள்ளார். போகும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது. இதற்கு மேல் என்ன சாட்சி வேண்டும். அனைத்து வகையான மக்களும் எங்களை வரவேற்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.