நவம்பர் 30ம் தேதி காலை டித்வா புயல் கரையை கடக்கும்...சென்னை வானிலை மையம்
சென்னை : டித்வா புயல், நவம்பர் 30ம் தேதி அதிகாலை தமிழ்நாடு மற்றும் ஆந்திரா இடையே கரையை கடக்கும் என தென் மண்டல ஆய்வு மைய இயக்குநர் அமுதா செய்தியாளர் சந்திப்பின் போத தெரிவித்துள்ளார்.
வங்கடலில் உருவாகி இருக்கும் புதிய புயல் குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தென்மேற்கு வங்கக் கடலில் புயல் உருவானது. இதற்கு டித்வா என பெயரிடப்பட்டுள்ளது. சென்னைக்கு தெற்கே தென்கிழக்கில் 700 கி.மீ., தூரத்தில் புயல் மையம் கொண்டுள்ளது. இதனால் நாளை 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காரைக்கால், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
நவம்பர் 30ம் தேதி அதிகாலை தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி இடையே தெற்கு ஆந்திரா கடலோரத்தில் புயல் கரையை கடக்கும் போது சென்னையில் கனமழை பெய்யக் கூடும். 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். நாளை நாகை, திருவாரூர் உள்ளிட்ட 5 டெல்டா மாவட்டங்களில் கனழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும். டித்வா புயல் உருவானதை அடுத்து பாம்பன் துறைமுகத்தில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு புயல் மற்றும் கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.