Cyclone Montha effect: திருவள்ளூருக்கு ஆரஞ்சு... சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!
சென்னை : மோந்தா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகி உள்ள மோந்தா புயல் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவிற்கு அருகே இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆந்திரா, தமிழக கடலோர பகுதிகள், ஒடிசா ஆகிய பகுதிகளுக்கு அதிக கனமழை மற்றும் சூறாவளி காற்றிற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி ஏராளமான மக்கள், வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவுக்கு 240 கி.மீ தொலைவில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளது. விசாகப்பட்டினத்துக்க 320 கி.மீ., மசிலிப்பட்டினத்துக்கு 160 கி.மீ., தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. மோன்தா புயல் 12 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று மாலை அல்லது இரவுக்குள் புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.