வங்கக் கடலில் உருவானது சென்யார் புயல்.. தமிழ்நாட்டுக்கு மழை எப்படி இருக்கும்?

Su.tha Arivalagan
Nov 26, 2025,10:28 AM IST

சென்னை: வங்கக் கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்தப் புயலுக்கு சென்யார் என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்புயலானது, 24 மணி நேரம் வரை புயலாகவே நீடிக்கும் என்றும், அதன் பிறகு இது வலுவிழக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.


வங்கக் கடலில் மலேசியா அருகே, மலாக்கா நீரிணைப் பகுதியில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறியுள்ளது. இதற்கு சென்யார் என்று பெயரிடப்பட்டுள்ளது. 



இந்தப் புயலானது, தோராயமாக  வியட்நாமின் ஹோ சி மின் நகரிலிருந்து தென்மேற்கே சுமார் 614 கடல் மைல் தொலைவில் அமைந்திருந்தது. இது கடந்த ஆறு மணி நேரத்தில் 07 நாட்டிகல் மைல் என்ற  வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. அதேபோல இலங்கையின் கொழும்புக்குக் கிழக்கு-தென்கிழக்கே சுமார் 200 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது. 


இந்தப் புயலானது 24 மணி நேரம் புயலாக நீடிக்கும் என்றும் அதன் பிறகு வலுவிழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலால் தமிழ்நாட்டுக்கு நல்ல மழை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.