துணிச்சல்
- க. யாஸ்மின்சிராஜூதீன்
துணிச்சல் வேண்டும் மனதிலே
இன்றேல் தூக்கி வீசப்படுவாய்
அகலபாதாளத்திலே.....
ஆழ்கடலை வெல்ல துணிச்சல் தரும் நீச்சலே....
நீல்ஆம்ஸ்ட்ராங்கின் துணிச்சலே
நிலவில் கால்வைத்த முதல் மனிதன்
என்ற பெருமையே....
தாமஸ் ஆல்வா எடிசனின் துணிச்சலே இருண்ட உலகின்
வெளிச்சமே....
சிசுவின் துணிச்சலே பூமித்தாயின்
பிள்ளைஆனதே...
பள்ளி செல்ல துணிச்சலே
பலதிறன்களை கற்றுத்தந்ததே...
பட்டங்கள் வென்று விமர்சனங்களைக் கொன்றதே...
நோயாளியின் துணிச்சலே எமனையும் விரட்டி அடிக்குமே....
போர்வீரனின் துணிச்சலே
வெற்றி வாகை சூடுமே....
எத்தனை எத்தனை தோல்விகள்
சந்தித்தாளும் மனபலம் படைத்தவனின் துணிச்சலே..
ஒருநாள் வென்றே தீருமே.....
நம்ஒவ்வொருவரின் துணிச்சலே
நம்மை சாதனையாளன் ஆக்குமே....
விடுதலைப் போராட்ட வீரர்களின்
துணிச்சலே சுதந்திர இந்தியா....
துணிந்தால் சிகரமும் நம் காலடியில்
நடந்தால் முற்காடும் பாதையளிக்கும்...
நம் ஒவ்வொரு அசைவும் துணிச்சலே....
முடியாதது எனக்கூறப்பட்டவை
அனைத்தும் வெற்றி வாகை சூடியது
துணிச்சலால் மட்டுமே....
துணிந்து செயல்படுவோம்... நம்
இலட்சியங்களை நிஜமாக்குவோம்...
துணிச்சலே துணை என்பதை மறவோம்.....
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)