மாமல்லபுரம் கடற்கரையில் தசாவதாரம்.. இன்று மாலை.. மறக்காமல் பாருங்கள்!

Su.tha Arivalagan
Dec 31, 2025,10:08 AM IST

சென்னை: மாமல்லபுரத்தில் நடந்து வரும் இந்திய நடனத் திருவிழாவில் இன்று தசாவதார நிகழ்ச்சி நடன வடிவில் இடம் பெறவுள்ளது.


மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சார்பாக இந்திய நாட்டியத் திருவிழா நடந்து வருகிறது. ஜனவரி 19ம் தேதி வரை இந்த விழா நடைபெறும்.


தினசரி மாலை 5.30 மணி முதல் இரவு 8. 30 மணி வரை இந்த நாட்டியத் திருவிழா நிகழ்வுகள் தினசரி நடைபெறுகிறது. 




அந்த வகையில் இன்று இன்று டாக்டர் சசிகலா வெங்கடேசன் தலைமையிலான நிருத்யகலா வைபவம் சரஸ்வதி நாட்டியாலயா வழங்கும்  பரதநாட்டிய தசாவதார நிகழ்வு இடம் பெறவுள்ளது. இன்று நடைபெற உள்ள சிறப்பு கலாசார நிகழ்ச்சியில், தசாவதாரம் என்ற ஆன்மிக–பாரம்பரிய கருப்பொருளை மையமாகக் கொண்டு, மாணவிகள் தங்கள் அழகிய நடன நிகழ்வின் மூலம் காட்சிப்படுத்த உள்ளனர்.


இந்த நடன நிகழ்ச்சியில், வி.சக்தி கங்கா, ஆர். திவ்யதர்ஷினி, டி. மலர், பி. தாரணி, எஸ். சஹானா, வி.ஜே.நிரஞ்சனா, எஸ். தேஜஸ்வினி, ஐ.ஷோபாஸ்ரீ, எஸ். கவிநயஸ்ரீ, எஸ். வைஷாலி, ஜி. பவித்ரா ஆகியோர் கலந்து கொண்ட நடன வடிவில் தசாவதாரத்தை கண் முன் கொண்டு வரவுள்ளனர்.


இந்திய கலாசாரத்தின் ஆழமும், பக்தியும், கலை நயமும் ஒன்றிணைந்து பார்வையாளர்களை கவரும் வகையில் இந்த நாட்டிய தசாவதாரம், அமைக்கப்பட்டுள்ளது. மாணவிகளின் அசைவுகளும், உணர்வுகளும் தசாவதாரத்தின் அர்த்தத்தை உயிரோட்டமாக வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் என்று நிருத்யகலா வைபவம் சரஸ்வதி நாட்டியாலயா குழுவினர் தெரிவித்துள்ளனர்.