திண்டுக்கல் மருத்துவமனை தீவிபத்தில் 7 பேர் பலி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.. உதவி அறிவிப்பு

Meenakshi
Dec 13, 2024,12:05 PM IST

திண்டக்கல்: திண்டுக்கலில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.


திண்டுக்கல்-திருச்சி சாலையில் காந்திஜி நகரில் தனியாருக்கு சொந்தமான சிட்டி மருத்துவமனை இயங்கி வருகிறது.டாக்டர் முரளிதரன் என்பவருக்கு சொந்தமான எலும்பு முறிவு மருத்துவமனை இது. இந்த மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். இங்கு நான்கு தளங்கள் உள்ளன. 




மருத்துவமனையில் நேற்று இரவு 10 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் மின்கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டது. தி விபத்தின் போது மருத்துவமனை முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இந்த புகையினால் லிப்டில் இருந்த 5 பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். சம்பவம் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்து நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அருகில் இருந்த தனியார் மற்றும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


இந்த விபத்தில் லிப்படில் இருந்த 5 பேரும், அத்துடன் மேலும் இருவரும் சேர்ந்து 7 பேர் உயிரிழந்தனர். மேலும், தீ விபத்தில் 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தின் விசாரணையின் போது உயிரிழந்தவர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 


தேனி மாவட்டத்தை சேர்ந்த சுருளி (50) மற்றும் அவரது மனைவி சுப்புலட்சுமி(45), தாடிக்கொம்பு பகுதியை சேர்ந்த மாரியம்மாள் (50), இரவது மகன் மணி முருகேசன் (28), என்.ஜி.ஒ  காலனியைச் சேர்ந்த ராஜசேகர் (35) மற்றும் ஒரு சிறுமி என 7 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துடன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்