Festive month.. வருடத்தின் கடைசி மாதம்தான்.. ஆனால் அடுத்த ஆண்டின் வெற்றிக்கான வழிகாட்டி!

Su.tha Arivalagan
Dec 01, 2025,03:43 PM IST

- அ.சீ. லாவண்யா


உலகம் முழுவதும் கலாச்சாரம், வரலாறு, விழாக்காலங்கள் என பல்வேறு சிறப்புகளால் நிறைந்த டிசம்பர் மாதம் இன்று தொடங்கியுள்ளது. ஆண்டு முடிவை வண்ணமயமாக்கும் முக்கிய நாட்கள் மற்றும் நினைவு தினங்கள் காரணமாக "Festive Month" என அழைக்கப்படுகிறது.


டிசம்பர் வந்தாலே திசைகள் எல்லாம் தணல் காற்றாக கீதம் பாடும் மாதம்.. பனிக் காற்று வீசும்.. மெல்லிய ராகமாய் மழை துளிகள் தாளம் போடும் மாதம்.


குளிரும்  தருணத்தில் அழகாய் மலரும் பூக்களில் ஆண்டு ஒருமுறை மட்டும் பிறக்குமாம் குறிஞ்சி மலர் மலரும் மாதம்.


அன்பின் உருவமான ஆண்டவரை வரவேற்கும் பொன்னான மாதம்.




கிறிஸ்துமஸ் விளக்குகள் வீதியெங்கும் கூட்டம் சேர்க்கும் ஒளித் துளிகள், குழந்தை சிரிப்பில் மணி ஒலி போல காலம் கொஞ்சும் இனிய தருணங்கள் நிகழும் மாதம்.


மணிகள் ஒலிக்க நட்சத்திரம் கூட்டம் கூட புது வருடத்தை வரவேற்கும் மாதம் 


காகிதத்தில் கனவுகள் எழுதிய நொடியை வருடம் சேமிக்கும் மாதம் 


காலத்தின் கடைசி வாசலில் புதிய முடிவுகள் எடுக்கும் எண்ணத்தை உருவாக்கும் மாதம் 


முடிவு என்றாலும் கூட தொடக்கம் ஒன்று பிறக்கத் இருக்கும் என்று நினைக்கும் மாதம் 


டிசம்பர் இரவு அமைதியில் மனம் ஒரு பக்கத்தை முடிக்கும் மாதம்


மனதில் இருக்கும் குழப்பங்கள், கவலைகள், துயரங்களை எல்லாம் Send off பண்ணி அனுப்பும் மாதமே டிசம்பர் மாதம்


புதிய வருடத்தின் பிறப்புக்கு கட்டியம் கூறும் மாதம்தான் வருடத்து கடைசி மாதமான டிசம்பர். பல வகையிலும் டிசம்பர் நமக்கு முக்கியமானதே.. ஒரு வருட காலம் நாம் என்ன செய்தோம் என்பதை ரீவைன்ட் செய்ய உதவும் மாதம்.. இந்த வருடத்தில் நாம் செய்யத் தவறியதை அடுத்த வருடம் செய்ய வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொண்டு நம்மை நாமே Refine செய்து கொண்டு ஜனவரியில் அடியெடுத்து வைப்போம்!.


தென்தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்!


(அ.சீ.லாவண்யா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)