பெண் எனும் பெருமை!
Mar 08, 2026,04:38 PM IST
- தீபா ராமானுஜம்
அப்பாவின் செல்லமான இளவரசியே !!
சகோதரனின் அன்பான உடன்பிறப்பே !!
நண்பனின் மனமறிந்த தோழியே !!
கணவனின் இதயத்தில்
மகாராணியே !!
மகனின் பாசமான அன்னையே !!
இயந்திர உலகத்தை இனிமையாக மாற்றுபவளே !!
அன்பை வாரி வழங்கிடும் வற்றாத ஜீவநதியே !!
ஆறுதல் தந்திடும் அன்பு மனமே !!
துன்பம் போக்கிடும் தூய உள்ளமே !!
மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்கும் மந்திரமே !!
அழகில் நிலவே !!
அமைதியில் தென்றலே !!
பொறுமையில் பூமியே !!
புன்னகையில் தேவதையே !!
மானுடம் போற்றும் மனிதியே !!
அகிலத்தை அன்பால் ஆளும் பெண்மையே !!
உன்னால் என்றும் மனிதம் வாழட்டும் !!
உலகம் உன்னைப் போற்றட்டும் !!