காதல்!
Sep 16, 2025,04:17 PM IST
- தீபா ராமானுஜம்
கண்களை மூடி கனவினில் மிதக்க வைக்கும்...
கூட்டத்தை தவிர்த்து தனிமையில் ரசிக்க வைக்கும்...
தன் பிம்பம் பட்டு பட்டே கண்ணாடி தேயும்...
தானாகவே களிப்பு வந்து சேரும்...
கண்களில் மின்னல்கள் அடிக்கடி தோன்றும்...
கண்ணாடி வளையல்கள் சங்கீதம் பாடும்...
உடுத்தும் ஆடையில் உன்னதம் சேரும்...
வைக்கும் பொட்டிலும் வண்ணங்கள் கூடும்...
இன்னிசையில் மயங்கும் இயற்கையை ரசிக்கும்...
இதயத்தின் சத்தம் இன்பமாய் கேட்கும்...
சந்தனக் காற்று உயிரை வருடும்...
ஜன்னல்கள் சொர்க்கத்தின் வாயிலாய தோன்றும்...
கல்லூரி நுழைவாயில் கற்கண்டாய் இனிக்கும்...
கருத்தான பாடங்கள் கதைகளாய் தோன்றும்...
புத்தகங்களைத் திறந்தால் கவிதைகள் தெரியும்...
பூவின் காதுகளில் மனம் ரகசியம் பேசும்...
அற்பங்கள் எல்லாம் அதிசயமாய் தோன்றும்...
ஆண்டு விடுமுறை வேம்பாய் கசக்கும்...
காதல் வந்தால் மனம் அழகாக ஆகும்...
கனவுகள் எல்லாம் நிஜமாக மாறும்...!