அன்பெனும் குடைக்குள் அகப்படும் மனமே!
- ஔவை அ.ர.தீபாரவி
அப்பா
என்றால்
அகிலமும்
அடங்கும்
அன்பைக்
கொட்டித்
தீர்க்கும்
அடித்தளம்
பெண்
பிள்ளையைப்
பெற்ற
பெருமிதம்
பெற்றவளின்
சாயலைக்
கண்டு
மகிழும்
வாழ்வின்
பொருளை
எண்ணித்
திளைக்கும்
முகத்தில்
சிரிப்பைக்
கண்டு
மலரும்
உழைப்பின்
களைப்பு
ஓடி
ஒளியும்
விரல்
பிடியில்
துணிவது
பிறக்கும்
வளர்ந்தாலும்
தந்தைக்கு
மகளதிகாரம்
பிடிக்கும்
பொறுமையின்
இலக்கணமாய்
பூலோகம்
அறியும்
இருக்கும்
போது
புரியாத
விளக்கம்
இழந்த
பின்பே
அத்தனையும்
விளங்கும்
யாவரும்
திறக்க
மறந்த
புத்தகம்
காலத்தால்
வடிக்க
இயலாத
காவியம்
(கவித்துளி சிறப்புக் கவிதைப் போட்டியில் கலந்து கொண்ட கவிதை. ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).