கைப்புடிச்ச கண்ணாளா காலத்துக்கும் வருவீகளா!

Su.tha Arivalagan
Sep 07, 2026,12:08 PM IST

- ஔவை அ.ர.தீபாரவி


கண்ணுல  

வச்சுத்தான்  

காப்பேனு 

கருத்தாதேன் 

சொன்னீக!


தூசிகூடப்

பட்டுக்

கலங்கிடாம 

கரசேக்க

வந்தீக!


காத்துக்

கருப்பு 

அண்டிடாம  

கனவுலயும்  

மெதந்தீக!




அம்புட்டு

ஆசயும் 

சொல்லிப்புட்டேன் 

ஒம்மனச

அள்ளிப்புட்டேன்!


தைமாசம்  

பொறக்கட்டும்  

தங்கத்துல

தாலியத்தான்

செஞ்சுடையா!


ஊரெல்லாம் 

சுத்தித்தான் 

வருவோமா!

ஒலகமே  

நீதானையா!


உள்ளத்துல 

ஓமொகத்த

ஒட்டவச்சுப்

பாக்குதே

பாவிமனம்! 


ஒன்னுசேரும் 

நேரம் 

வரவே  

கும்புடுறேன்

கடவுளையே!


மால 

மாத்தித்  

தோளுலதான் 

சாஞ்சு

கொள்ளலாமா!


நல்லசேதி  

கேட்டிடத்தான்

நாந்துடிக்க 

நாளுகடத்த  

வேணாமையா! 


(ஈரவிழி இலக்கிய மன்றம் நடத்திய தன்னம்பிக்கைக் கவிதைப் போட்டியில் பங்கேற்ற கவிதை. ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).