காலத்தை வென்றவன்!
Sep 18, 2026,03:21 PM IST
- ஔவை அ.ர.தீபாரவி
சிற்பிக்குள் கவியொன்று
முத்தையாவாய்ப் பிறந்ததே இன்று..
எக்காலமும் மறக்க இயலாத
தத்துவச் சுரங்கமே.
முக்காலமும் உணர்ந்த
மூன்று தமிழ் அரங்கமே
நினைத்தாலே கவிதைகள்
வரி தவழ்ந்து
முழங்குமே.
படித்தாலே
பக்குவமும்
உளம் வந்து நிறையுமே.
வாழ்வின் வரைமுறையை
அளந்து
வரைந்த
ஓவியனே..
கலைமகனே
காவியத்தாய் பெற்ற தலைவனாய்த்
திகழ்ந்தவனே
ஒன்று மட்டும் ஆணித்தரமாக
உணர முடிகிறதே..
பல படைப்பாளர்களுக்கு மாதிரி நீயே...!
(ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம், டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).