உசுரே நீதானே ஒறவாய் வருவேனே..
- ஔவை அ.ர.தீபாரவி
நெஞ்சாங் கூட்டுக்குள்ள ஒன்னோட மொகமே நிக்குதையா
நெனைப்பு வரும்
போதெல்லாம் சொல்லாம
விக்குதையா
ஊரு ஒறங்கிப் போனாலும் ஓங்கிளியும்
வாடுதையா
சோறுகூடத் தின்னாம நோவு வந்து கொல்லுதையா
காந்தவிழிக் கண்ணுதானே
கன்னங் கிள்ளிப் போகுதையா
சாயும் நேரம் வந்தாலே மாமனத்தான் தேடுதையா
வாய்ப்பேச்சு போதுமையா
பொறும எல்ல மீறுதையா
சங்குக்
கழுத்தும் காதோரம்
சத்தமாகப் பேசுதையா
ஒனக்காகப் பொறந்த புள்ள ஒத்தையில தவிக்குதையா
வேல ஒன்னும் ஓடலயே
மாலதர வேணுமையா
(ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம், டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).