ஆசையில பாத்திகட்டி!
- ஔவை அ.ர.தீபாரவி
மனசோரம்
பாத்திகட்டி
மாமாவப்
பாக்கத்தானே
ஆசவச்சேன்
மாமாவப்
பாக்கும்போது
மனசெல்லாம்
மல்லிகப்பூ
வாசம்வச்சேன்
வயலோரம்
நீயும்வந்தா
வரப்போரம்
நான்
விழுவேன்
துடியாகத்
துடிக்கும்
உம்மோட
பாசம்
பிடிக்குமய்யா
உசுருக்குள்ள
என்ன
வச்சுப்
பூட்டாமப்
பூட்டிப்புட்ட
அம்புட்டு
பாசத்தையும்
அழகாகக்
காட்டிப்புட்ட
இந்த
சிறுக்கி
மவ
என்ன
செய்யிவா
நாத்துனு
நடவுனு
உழவுனு
மாடுனு
வண்டினு
இத்தனையும்
உன்
நெனப்புல
அத்தமகளயும்
எண்ணிப்பாரு
அப்பங்கிட்ட
பேசுய்யா
தை
மாசம்
பொறந்துருச்சு
தங்கத்துல
தாலி
செஞ்சு
வாரேனு..
சொல்லு
வந்து
நில்லு
(ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).