பணம் தேடும் பறவைகள்!

Su.tha Arivalagan
Sep 15, 2026,04:50 PM IST

- ஔவை அ.ர. தீபா ரவி


பிறந்தவூரை விட்டுத்தானே பிழைப்பை நாடும்


அகத்தில் அழுதே புறத்தில் 

சிரிக்கும்


குறைகளும்

இல்லையே

பொய்கள்  பேசும்


என்னடா வாழ்க்கையிது?

தனியே நோகும்


ஒருநாள் 

மாறுமென மனத்திற்குக் கூறும்




உணர்வுகள் மேலோங்க 

அடக்கி ஆளும்


சொல்லவும்  முடியாமல் சொற்களை விழுங்கும்


குடும்பம் மகிழவே தன்னை மறக்கும்


இளமையைத் தொலைத்தே முதுமையில் வாடும்


உடலை வருத்தி உள்ளம் துடிக்கும்


கனவிலே களிப்புற கண்கள் மூடும்


விடிந்ததும் கால்களும் பணிக்கு ஓடும்


(ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).