அதிகாலைத் தேநீராய்.. இதழ் பருகச் சுவையூறும்..!
- ஔவை அ.ர.தீபாரவி
காலை நேரம் காதின் ஓரம் இன்பம்..!
இன்பம்..!!
இசையின் அலைகள் செவியில் மோத ஓடும் துன்பம்..!
அதிகாலைத் தேநீராய்..
இதழ் பருகச் சுவையூறும்..
நெஞ்சின் ஓரம் மஞ்சம் போடும்
இனிமை சங்கீதம்.. ம்ம்ம்..
காலை நேரம் காதின் ஓரம் இன்பம்..!
இன்பம்..!!
எண்ணங்கள் கோடி வந்து இன்னிசை மீட்ட..!
வண்ணங்கள் ஓடி வந்து வாழ்த்திசை தீட்ட!
கவியின் உள்ளே வரிகள் மீட்டும் கீதம் சங்கீதம்..!
குயிலின் குரலில் இனிமை சேர
வாரும் உற்சாகம்..!
தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் சேரும் இந்நேரம்..!
சலசலவென்று ஓடை போடும் ஓசை சங்கீதம்..
எந்த வலிகள் வந்தபோதும் பண்கள் பாட ஓடிவிடும்..
காற்றில் ஆடும் இலைகள் கூட குயிலின் பேரைக் கூறிவிடும்..
லலலல லலலல லலலல லலலல
காலை நேரம் காதின் ஓரம் இன்பம்..!
இன்பம்..!!
வரிகளைப் பாரு..
அதிலே இராகத்தைச் சேரு..
மேகமாய் மாறு.
வந்து இசைமழைத் தூவு..
காற்றின் மொழியைப் பாட்டாய் மாற்றி
சந்தம் நீ பாடு..
கீற்றின் ஒலியை இசையாய் மாற்றி இன்னும் சுவை சேரு..
இயற்கை அதிலே இனிமை உண்டு ..
இணைந்தே நீ வாழு..
இதயம் மகிழும் இன்னிசை பாடி உலகை நீ ஆளு..
நாளைய உலகம் நம் கையில் என்று நம்பிக்கையோடு நடைபோடு..!
இன்று அதற்கு முழு மனதாக உன்னை நீயே மாற்றிவிடு..
லலலல லலலல லலலல லலலல
காலை நேரம் காதின் ஓரம் இன்பம்..!
இன்பம்
(ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).