மனத்தின் மடை திறந்ததே!

Su.tha Arivalagan
Apr 28, 2026,03:47 PM IST

- ஔவை அ.ர.தீபாரவி


இருவிழிகள் அள்ளியதே என்னவொரு விந்தை

அன்னை உந்தன் அழகினிலே மயங்குதடி சிந்தை

இருக்குமிடம் மறந்தேன் உன்னிலே தொலைந்தேன்

விழுகின்ற அருவியாம் தவழுகின்ற நதியாம்

அசைகின்ற கிளைகளாம் நடனமாடும் இலைகளாம் 


நுனியில் வடியும் திவலையும் 

கண்கவர்ந்தே தீரும் 


ஒப்பனைகள் ஏதுமில்லா பேரழகு உன்னிலே




வாழ்க்கை முழுமையாகும்

வேட்கை அதிகமாகும்


பார்த்திடவே பரவசம் கொடுத்திடவே நவரசம்


குளுமை எங்கும் பரவியதே வரிகளிலே


(கவித்துளி வழங்கும் சிறப்புக் கவிதைப் போட்டியில் கலந்து கொண்ட கவிதை. ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).