தேன் சிந்துதே வானம்

Su.tha Arivalagan
Jun 24, 2026,03:53 PM IST

- ஒளவை அர. தீபா ரவி


சில்லென்ற காற்று காதோரம்

சங்கதி கூற


கார்மேகமது மழைவரும்

அறிகுறியைச் 

சொல்லிச் செல்ல


ஆங்காங்கே புள்ளினங்கள்

பறந்தே புகலிடம் சேர


கால்நடைகளைக் கொட்டத்தில்

 கட்டி வைக்கும் தாத்தா


மாடியில் காயும் துணிகளைத் துரிதமாக

எடுக்கும் தங்கை


நனைய மனமின்றி

வீடுதேடி ஓடிவரும் நாய்க்குட்டி




குஞ்சுகளை விரைந்தழைத்துப் பஞ்சாரம்

அடைந்த கோழி


கப்பல் விடவே காத்திருந்த கடைக்குட்டித் தம்பி


குடை  விரிக்கக்

கூடாதென்று

குளியலிட்ட 

குமுதா


இவர்கள் ஆசையை 

அழகாய் நிறைவேற்றிய மேகம்


(தமிழ் அருவி வழங்கும் சிறப்புக் கவிதைப் போட்டியில் பங்கேற்ற கவிதை. ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).