உயிரைக் காக்கும் தோழியே!

Su.tha Arivalagan
May 13, 2026,04:34 PM IST

- ஔவை அ.ர.தீபாரவி


கண்கள் இரண்டும் என்றும் கருணை பேசுமே


மனத்தில் பொதுநலம்

புகுந்து

ஆட்சி நடத்துமே..


உதடுகள் மொழியும் 

சொற்கள்

யாவும் 

மருந்தாகுமே


அன்பின் 

மொத்தமும்

அகத்தினில்

அடைக்கலம் 

ஆகுமே


மானிடரைக் காக்கவும்

நோயைப்

போக்கவும் 

முனைபவளே




தன்னுயிரையும்

துச்சமாக 

எண்ணி

பல்லுயிரைக்

காப்பவளே


கடமையே 

கருதும்

வெண்ணிற

ஆடையின்

தேவதையே


பசி தாகம்

தூக்கம்  தாங்கிய

தாரகையே


அமைதி

பொறுமை

துரிதம் 

உன்றன்

அணிகலனே


பெண்ணே

உன்னாலே 

உலகம் 

ஆரோக்கியம் 

காணுதே


அத்தனை அழகு தேவதைகளுக்கும் 

இந்நாளில் மட்டும் அல்ல 

ஒவ்வொரு நாளும் வாழ்த்துகள் உரித்தாகட்டும்..


(உலக செவிலியர் நாள் சிறப்புக் கவிதைப் போட்டியில் இடம் பெற்ற கவிதை. ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).