மனமெல்லாம் மத்தாப்பாய்த் தெரிக்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்.. இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

Su.tha Arivalagan
Apr 14, 2026,01:06 PM IST

- ஔவை அ.ர.தீபாரவி 


உலகெல்லாம் வாழ்கின்ற 

அனைத்துத் தமிழ்ச் சொந்தங்களுக்கும்..


இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!


இந்தப் புத்தாண்டு 

எல்லோருக்கும் எல்லா வளங்களையும் 

நலங்களையும்..

நிறைவாகத் தரட்டும்..


உடல் மன ஆரோக்கியத்தை 

உணரத் தரட்டும்..




மனமெல்லாம் மத்தாப்பாய்த் தெரிக்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்..


எல்லோரும் இன்புற்று

வாழ இறையருள் கிட்டட்டும்.


பூப்போல முகம் மலர்ந்து..

முக்கனி போல

இதயம் சுவையுணரட்டும்


மனமெங்கும் மகிழ்வு நிறையட்டும்..


ஊரெல்லாம்..

உலகெல்லாம் 

உவகை மட்டுமே 

உறையட்டும்..


ஆர்ப்பாட்டம் அகன்று

அமைதியான வாழ்வு.. எங்கும் திகழட்டும்..


அன்பெனும் பிடியுள்

அகிலமே அழகாக வாழட்டும்..!


(ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).