கால்நடைகள் போற்றுவோம்..!
Jan 16, 2026,03:16 PM IST
- கி்.தீபன்
தினம் அருந்தும்
பால் முதல் ...விரும்பி
உண்ணும் இறைச்சி
வரை..
உயிரோடும் இறந்தும் பயன்
தருபவை
கால்நடைகள்..
கிராமத்து
உழவனுக்கும்..
நகரத்துக்
கிழவனுக்கும்..
நேரடியாகவும்
மறைமுகமாகவும்
உதவுபவை
கால்நடைகள்..
பசு இருப்பதால்
பல சிசுக்கள் பலம்
பெறுகிறார்கள்..
ஆடு இருப்பதால்
பல பெருசுகள் தலை
ஆடாமல்
இருக்கிறார்கள்..
காளை இருப்பதால்
உழைப்பாளிகள் ஒரு
வேளையாவது உணவு
பெறுகிறார்கள்..
வாலாட்டி இருந்தால் காலாட்டி
சாப்பிடலாம் என்பது
அனுபவ ஆன்றோர்
கூறும் நன்மொழி..
மொத்தத்தில்
கால்நடைகள் நம்
வாழ்வோடு இணைந்த காவல்
நடைகள்..
நமக்கு நாமே
நோய்கள்
மனிதனுக்கு மட்டுமே!
கால்நடைகள் நோயுற
காரணம்
நமது நாகரிக மோகமே..!
குக்கரில் சாதம்
வைத்து..கஞ்சிக்கு
வேட்டு வைத்தோம்..
வயல்வெளியைக்
கூறு போட்டு
புல்லுக்கும் புலம்ப
விட்டோம்...
காகிதமும்
நெகிழியும் கொடுத்து
கால்நடைகளை எல்லாம்
கால் (1/4)
நடைகளாக
சாலையில் தள்ளாட
விட்டோம்...
செய்யலாமா...
ஒருநாள் மேக்கப்
மட்டும் போதாது..
ஒவ்வொரு நாளும்
கவனம்..நம்மை
அண்டியிருக்கும்
உயிர்களுக்கு அதுவே..ஜனனம்...!
அனைவருக்கும் மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்!