வைகைத் துயில் கலைந்து வாசலில் போட்ட கோலங்கள்!
Jan 15, 2026,04:17 PM IST
- கி.தீபன்
வைகறைத்
துயில்
கலைந்து
வாசலில் போட்ட
கோலங்களும்..
கைவிரல்
கோர்த்த படி
கரும்புகள்
கடித்துச்
செல்லும்
குழந்தைகளும்..
துடைத்தும் மெழுகியும்
சுத்தத்தை அணிந்துகொண்ட
வீடுகளும்..
வெல்லமும் அரிசியும்
ஒன்றிணையக்
காத்திருந்த
பானைகளும்..
குலவையும் குதூகலமும்...
அளவில்லா
ஆனந்தமும்..
இவை அனைத்தும்
இனிமையைத் தவிர
வேறென்ன
தந்துவிடும்...
தை பிறந்துவிட்டால்
இனிமையோடு
எல்லாமே
வந்துவிடும்...
அனைவருக்கும்
இனிய பொங்கல்
நல்வாழ்த்துக்கள்...!
(கி்.தீபன் , ஆசிரியர், திருவாரூர்)