பெண்ணே நீ கடவுள்தான்!
Mar 08, 2026,04:10 PM IST
- கி. தீபன்
பெண்ணே நீ பூதான்..
பிறர் மகிழ
தன்னையே
தியாகம் செய்வதால்
பெண்ணே
நீ நிலம் தான்
உன்னோடு போரிடுபவர்களிடமும்
பேரன்பு கொள்வதால்
பெண்ணே
நீ நதிதான்
ஏற்ற இறக்கங்கள் எதுவரினும்
இலக்கை நோக்கி பயணிப்பதால்
பெண்ணே
நீ நிலாதான்
வளர்ந்தாலும் தளர்ந்தாலும்
உடையாமலிருப்பதால்
பெண்ணே நீ
கடவுள்தான்
மனதின் வலிகளையெல்லாம்
மௌனத்தில் கரைப்பதால்
பெருமைகொள் பெண்ணினத்திற்கு
இனிய மகளிர் தின
வாழ்த்துக்கள்..
(கி்.தீபன், ஆசிரியர், திருவாரூர்)