டெல்லியிலும், சுற்று வட்டாரத்திலும்.. விடிஞ்சு வந்து பார்த்தா.. ஒரே smog.. இயல்பு நிலை பாதிப்பு
டெல்லி: டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிப்பவர்கள் சனிக்கிழமை காலையில் அடர்ந்த பனி மூட்டத்துடன் அதாவது smog விழித்தெழுந்தனர்.
ஒட்டுமொத்த காற்றுத் தரமும் தீவிரம் Severe என்ற நிலையை நெருங்கி உள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, காலை 8 மணி அளவில் ஒட்டுமொத்த காற்றுத் தரக் குறியீடு (AQI) 390 ஆக இருந்தது. இது மிகவும் மோசம் என்ற பிரிவில் வருகிறது.
தேசிய தலைநகரில் பல பகுதிகளில் காற்றுத் தரம் தீவிரம் என்ற பிரிவில் இருந்தது. குறிப்பாக ஆனந்த் விஹார், புராரி கிராசிங், சாந்தினி சௌக், காஜிபூர், ஜஹாங்கிர்புரி, ஆர்.கே. புரம், ரோகிணி ஆகிய பகுதிகளில் நிலை தீவிரம் என்ற அளவில் இருந்தது.
அதிகாலையில் அடர்ந்த புகை மூட்டம் மற்றும் லேசான பனி மூட்டம் காரணமாக டெல்லியின் பல பகுதிகளில் எதிரில் இருப்பவர்கள் தெளிவாக தெரியாத நிலையே காணப்பட்டது.
இருப்பினும் அடர்ந்த பனி மூட்டம் காரணமாக டெல்லியில் விமான சேவை பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.