திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள் தண்டனைகள்.. யார் யாருக்கு என்னென்ன தண்டனை?.. முழு விவரம்!
கோயம்புத்தூர்: பொள்ளாச்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் குற்றவாளிகளின் தண்டனை குறித்த விபரங்களை நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
பொள்ளாச்சி வழக்கில் ஆறு வருடங்களுக்குப் பிறகு இன்று காலை கோவை மகளிர் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரும் குற்றவாளிகள் என அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் தண்டனை விவரங்கள் பிற்பகலில் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தது.
அதன்படி, பொள்ளாச்சி வழக்கு தொடர்பாக தண்டனை விபரங்களை அறிவித்துள்ளது கோவை மகளிர் நீதிமன்றம். அதில்
1.குற்றம் சாட்டப்பட்ட சபரி ராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணி, பாபு, ஹரோன் பாலு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 போருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
2.பாதிக்கப்பட்ட 7 பெண்களுக்கும் மொத்தமாக 85 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஒவ்வொரு பெண்களுக்கும் தலா 10 முதல் 15 லட்சம் வரை இழப்பீடாக வழங்க மாவட்ட சட்ட உதவி மையத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
3.அதேபோல் குற்றவாளிகளுக்கு விதித்த அபராத தொகையையும் வசூலித்து பாதுகாக்கப்பட்ட பெண்களுக்கே பிரித்து தர ஆணை பிறப்பித்துள்ளது.
4.குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரின் மீதும் வலுவான ஆதாரங்கள் இருப்பதால், அவர்கள் மேல் முறையீடு செய்தாலும் குற்றவாளிகளுக்கு விரிக்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்படும்.
குற்றம் சாட்டப்பட்ட 9 பேரின் ஆயுள் தண்டனை விவரங்கள்:
ஏ1 சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனைகள்
ஏ2 திருநாவுக்கரசுக்கு அதிகபட்சமாக தலா 5 ஆயுள் தண்டனைகள்
ஏ3 சதீஷுக்கு மூன்று ஆயுள் தண்டனைகள்
ஏ4 வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனைகள்
ஏ5 மணி என்ற மணிவண்ணனுக்கு ஐந்து ஆயுள் தண்டனைகள்
ஏ6 பாபுவுக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை
ஏ7 அருண் பாலுக்கு மூன்று ஆயுள் தண்டனைகள்
ஏ8 அருளானந்திற்கு ஒரு ஆயுள் தண்டனை
ஏ9 அருண்குமாருக்கு ஒரு ஆயுள் தண்டனை
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம்:
பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட ஏழு பெண்களுக்கும் மொத்தமாக 85 லட்சம் நிவாரணம் நிவாரணம் வழங்க கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பெண் A-க்கு ரூ. 2 லட்சம், B-க்கு ரூ.15 லட்சம் , C மற்றும் D -க்கு தலா ரூ. 10 லட்சம், E-க்கு ரூ.8 லட்சம், F- க்கு ரூ.15 லட்சம், H- க்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை பிறப்பித்துள்ளது.