கோடை விடுமுறையில் பள்ளியில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிய ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு

Su.tha Arivalagan
Jun 27, 2025,03:21 PM IST
தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்  கோடை விடுமுறையில் பள்ளியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர்  ஊற்றிய   ஆசிரியர்களுக்கு பள்ளியில் பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அதிகளவில் மரம் மற்றும் செடிகள் உள்ளன. கோடை கால விடுமுறையின் போது இந்த மரம் மற்றும் செடிகளுக்கு நீர் ஊற்றுவது கடினமான ஒன்றாக இருந்து வந்தது. அந்த பணியை அங்கு பணி புரியும் ஆசிரியர்களே தாங்கலாக முன்வந்து செய்துள்ளனர்.





அங்குள்ள அனைத்து மரங்களுக்கும், பள்ளியில் வெளியே நிழல் தரும் செடிகளுக்கும் கோடை விடுமுறையில் நாள் தவறாமல் தொடர்ந்து தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தனர் ஆசிரியைகள்  முத்துமீனாள்,  முத்துலட்சுமி, வள்ளி மயில்  ஆகியோர். இவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் பாராட்டு தெரிவித்து பரிசு வழங்கி கவுரவித்துள்ளார்.





இப்பள்ளி முழுவதும் நல்ல முறையில் நிழல் தரும் மரங்கள் , செடிகள் வளர்ந்து உள்ளன .பள்ளியின் வெளியேயும் சாலை ஓரத்தில் உள்ள புதிய மரச்செடிகளுக்கும் பள்ளி ஆசிரியைகள் தொடர்ந்து தண்ணீர் ஊற்றி வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.