உன்னை நினைப்பதையே என் மனம் காதலிக்கிறது...!
Sep 08, 2026,01:59 PM IST
- தனலட்சுமி
உன்னை நேசித்த இதயத்திற்கு
மட்டுமே தெரியும்,
நான் உன்னை எப்படி
சுவாசிக்கிறேன் என்று...
உன் நினைவு இல்லாத நொடி இல்லை,
உன் பெயர் ஒலிக்காத துடிப்பு இல்லை...
நீ அருகில் இல்லாவிட்டாலும்,
என் நினைவுகளின் ஒவ்வொரு பாதையிலும்
நீ மட்டும் தான் நடந்து கொண்டிருக்கிறாய்...
உன்னை மறக்க வேண்டும் என்று
என் மனதிடம் சொன்னாலும்,
உன்னை நினைப்பதையே
என் மனம் காதலிக்கிறது...
நீ எனக்கு சொந்தமா இல்லையா என்பது
தெரியாது,
ஆனால்...
என் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும்
(தனலட்சுமி, எம்காம் பிஎட், சூரியா சர்வதேச மேல்நிலைப்பள்ளி, முத்தியால்பேட், புதுச்சேரி)