அவங்க அப்பாவை விட ரொம்ப ரொம்ப சிம்பிள் ஐஸ்வர்யா.. முன்னாள் மனைவியைப் புகழ்ந்த தனுஷ்

Su.tha Arivalagan
Jul 28, 2025,03:53 PM IST

சென்னை: கணவன் மனைவி என்ற உறவிலிருந்து சட்ட ரீதியாக பிரிந்து விட்ட தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் தற்போது தங்களது பிள்ளைகளுக்கு நல்ல பெற்றோராக இருக்கும் முயற்சிகளில் தீவிர அக்கறை காட்டி வருகின்றனர். இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறித்து முன்பு தனுஷ் பேசிய பேட்டி ஒன்று இப்போது வைரலாகி வருகிறது.


நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் 2022-ல் பிரிவதாக அறிவித்தனர். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில், 2024-ல் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு முற்றியதன் விளைவாகவே இருவரும் விவாகரத்து பெற்றனர். 




இந்த நிலையில், ஐஸ்வர்யாவைப் பற்றி தனுஷ் முன்பு பேசிய வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அதில் ஐஸ்வர்யாவின் எளிமை குறித்து சிலாகித்துப் பேசியுள்ளார் தனுஷ். அதில் தனுஷ் கூறியிருப்பதாவது: ஐஸ்வர்யாவின் எளிமை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய அப்பா ரஜினிகாந்த் சிம்பிளான மனிதர். அவரை விட ரொம்ப ரொம்ப சிம்பிளான ஆளைப் பார்ககணும்னா அது ஐஸ்வர்யாதான். அவர் ஜினிகாந்தை விட 100 மடங்கு எளிமையானவர் என்று தனுஷ் கூறியுள்ளார். இந்த பேட்டியை தற்போது தனுஷ் ரசிகர்கள் டிவிட்டர் தளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 


தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் இப்போது தங்களது இரு மகன்களுக்கும் நல்ல பெற்றோராக இருக்க முயற்சித்து வருகின்றனர். மகன் யாத்ராவின் பள்ளி விழாவில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டனர். விவாகரத்துக்குப் பிறகும், அவர்கள் இருவரும் தங்கள் மகனுக்காக ஒன்று சேர்ந்தது பலரையும் நெகிழ வைத்தது.