குமூகத்தில் விந்தையான வியப்பு

Su.tha Arivalagan
Jul 17, 2026,11:01 AM IST

- டிலாணி ஸ்ரீதரன்


சிறுதுளி விந்து உயிராக! 

நாய்க்கு நன்றி காட்ட! 

சேவலுக்கு அதிகாலை கூவ! 

பசுவுக்கு பொதுநலமாய் இருக்க! 

எறும்புக்கு சுறுசுறுப்பை காட்ட! 

தேனிக்கு சேமிப்பை பழக்க! 

சிலந்திக்கு வலை பின்ன!


காகத்திற்கு ஒற்றுமையாய் இருக்க! 

கவரிமானுக்கு தன்மானம் காக்க!

சிங்கத்துக்கு வீரத்தை காட்ட! 

கங்காருக்கு அன்பாக அரவணைக்க! 

பட்டுப்புழுவுக்கு தியாகம் செய்ய! 




பூனைக்கு பொருட்களை திருட!

யானைக்கு பலத்தை அதிகரிக்க! 

நரிக்கு தந்திரமாக செயல்பட! 

பரிக்கு வேகமாக ஓட! 

பருந்துக்கு சாதுரியமாக இருக்க! 

 

கழுதைக்கு மாந்தர்களுக்கு உதவிட!

எருமைக்கு ஏர் பிடிக்க! 

தூக்கணாங்குருவிக்கு சிற்பத்தை செதுக்க! 

மரங்கொத்திக்கு நுட்பத்தை உறைவிடமாக்க!

மயிலுக்கு அழகிய நடனமாட!


குயிலுக்கு இரவலாக இனப்பெருக்கம் செய்ய! 

குரங்குகளுக்கு குறும்புகளை விளையாட்டாக்க!

மீனுக்கு தண்ணீரில் நீந்த!


இவற்றையெல்லாம் யாரும் கற்றுத் தருவதில்லை!!!!

இவையெல்லாம் தெரியும் என்று கர்வம் கொண்டதுமில்லை! 


ஆனால் எல்லாவற்றையும் எவரோ ஒருவரிடம் கற்றுக் கொண்ட மனிதர்கள்

இதற்கு புறம்பாக செயல்பட மறுக்கவும் இல்லை!