சுதந்திரம் எனும் ஒளி

Su.tha Arivalagan
Aug 15, 2026,12:50 PM IST

- டிலாணி ஸ்ரீதரன்


வெண்டாமரை 

மலர

வெண்புறாக்கள் 

சிறகடிக்க 


விடியல் 

விசித்திரமாகி

விரக்தியில்லாத 

வாழ்க்கையாக


வீரம் 

பொங்கி 

தேசம்

வானுயர




உயிரை

அர்ப்பணித்து 

உரிமைக்

காத்த


தியாகத் 

தீயில் 

தன்னை

வதைத்த


வஞ்சம்

ஒழித்து

வழித் 

திறக்க


அச்சம் 

தகர்த்து 

அரணாக

நின்ற


பசிப்

பொறுத்து

போரில்

வென்ற


கண்ணீர்

துடைத்து 

நம்பிக்கை 

விதைத்த


குரல் 

முழக்கி

களம் 

எழுப்பிய


பலம் 

சேர்த்து 

பகைவரை

சாய்த்த


மொழி 

காத்து

தன்மானம் 

உயர்த்திய


மக்களை

ஒன்றாக

முன்னேறச் 

செய்த


தேசியக்கொடி 

தாங்கி

உதிரம்

சிந்திய


விடுதலை

செழித்து

இன்பம் 

பொங்க


தாயகத்திற்காக

போராடியவர்களை

சிரந்தாழ்த்திப்

போற்றுவோம்