அலை ஓடியே போனாலும் கரை கொண்ட நுரையழகு!

Su.tha Arivalagan
Sep 07, 2026,03:00 PM IST

- டிலாணி ஸ்ரீதரன்


இயற்கையின் படைப்பில் 

ஒவ்வொன்றும்  ஒப்பற்ற அழகுகளே!!!


இறைவன்  வரைந்த அழகோவியமான 

இயற்கை என்றுமே தனி அழகு!


மணம் வீசும் மலரழகு

மழை தந்த நதியழகு!


சலசலக்கும் சங்கீதம் பாடும் நீலக்கடலின் அலை அழகு!

அலை ஓடியே போனாலும் கரை கொண்ட நுரையழகு !


கார்முகில் தந்த  மழையின் வரவைக் கண்டு ஆடும் மயில் அழகு!

மழை நின்ற பின்னும் இலைகளில் சிந்தும் துளி தண்ணீரும் அழகு!




வானவில் தீட்டும் நிறமும் பேரழகு!

வாரி அதை உடுத்திய வானமும் அழகு!


இனிமையான குரல் கொண்டு பாடும் குயில் அ ழகு!

இரவில் உலா வரும் நிலவும் அழகு !


இமைத் திறந்து காவலான விண்மீனும் ஓர் அழகு!

நகரும் முகிலினமும் இரவோடு தான் அழகு!


புல்லின் மேல் அமர்ந்த பனித் துளியும் அழகு!

சூரியன் மறையும் அந்தி மாலையில் அடி வானமும் பேரழகு!


சுழலும் உலகில் இயற்கை தந்த ஒவ்வொரு அழகும்

செயற்கை அழகுக்கு ஈடாகுமோ??


இயற்கையின் படைப்பிலே ஒவ்வொன்றும் 

அதிசயமான அற்புதமான வியக்கத்தக்க அழகுகளே!!!!!