மாறுமா சமுதாயம்?
Sep 14, 2026,10:09 AM IST
- டிலாணி ஸ்ரீதரன், பதுளை, இலங்கை
மாறாத உலகினிலே
மதவெறியுடன் அவலங்களும் அவதாரமெடுக்கும்!
ஆறாத காயங்களிலே
ஆழமாய் துளையிட்டு எரிவெடுக்கும்!
தீராத சோதனையாய்
தீந்தமிழும் திட்டுவதில் பொலிவிழக்கும்!
கூறாத பேச்சுகளும்
கூட்டத்தோடு வேடிக்கையாய் கும்மியடிக்கும்!
மறையாத வடுக்களும்
மனமதில் திடமாக தைத்திருக்கும்!
குறையாத பிரச்சனைகளுக்காக
குடிசைகளையும் குணமிழந்து பற்றவைக்கும்!
தெரியாத மொழிகளும்
தெள்ளுத்தமிழை தேவையற்று இசைக்கும்!
முறியாத சொந்தங்களும்
முட்டிமோதி பிரிவுகளை தேர்ந்தெடுக்கும்!
அறியாத குழந்தைகளும்
கலவரத்தில் அனாதைகளாய் பிறப்பெடுக்கும்!
புரியாத இனவெறி
புயலாய் மண்ணுயிர்களையும் கருவறுக்கும்!