சமூகம் திருந்துவது எப்போது?
Aug 29, 2026,03:38 PM IST
- டிலாணி ஸ்ரீதரன்
உணர்வுக்குள் ஊடுருவும் மெய்க்காதல் எக்குலத்தையும் ஏற்பதேன்?
உயிருக்குள் உறையும் உதிரத்தில் நிறமாற்றம் செய்யவில்லை ஏன்?
உயிர்ப்பிக்கும் கருவறையும் உறவை தர மொழியை தேடுவதில்லை ஏன்?
உதவியெனும் தேவையில் இன வேறுபாடு பார்ப்பதில்லை ஏன்?
உடலுருக்கும் மதுவினையருந்த மார்க்கம் வினவப்படுவதில்லை ஏன்?
உணவளிக்கும் உழவர்களின் சமயப் பின்னணி அறியப்படாதது ஏன்?
உபாதைகளின் உச்சத்தில் வைத்தியர்கள் எம்மொழியென கேற்பதில்லை ஏன்?
உடைமைகளின் உருவாக்கம் யாரென வினவாமல் சேமிக்கப்படுவது ஏன்?
உனக்கென தேவைகளை நாடிட சாதி மதம் தேவையில்லை ஏன்?
உலகத்தை படைத்த கடவுளுக்கும் சாதி சிலை வைப்பது ஏன்?
சிந்தித்து செயல்பட சிந்தையும் தெளியும் புரிந்து கொள்ளவில்லை ஏன்?
சிக்கலை உருவாக்காதே
வாழ்வது சிலகாலம்
மனித நேயத்தோடு வாழ்ந்திடுவோம்.