Poem: இருமனம் இணைந்த காவியம்

Su.tha Arivalagan
Aug 19, 2026,02:51 PM IST

- டிலாணி ஸ்ரீதரன்


உலகெல்லாம் உயிருண்டு உயிர்ப்பில் களிப்புண்டு!

உறவுகள் ஆயிரமுண்டு உணர்வுகளும் அதிலுண்டு!


உன்னதமான காதலுமுண்டு உவகையுறும் மனமிரண்டு!

உதயமாகும் வழியுண்டு உத்தமமான வாழ்க்கையுண்டு!


உடலில் பாதியுண்டு உதிரத்தில் மீதியுண்டு!

உச்சத்தில் அன்புண்டு உருவாக்கும் பிறப்புண்டு!


உழைப்பில் உறுதியுண்டு

உளவியலில் 

சமத்துவமுண்டு!




உருவாகும் சண்டையுமுண்டு

உடனடித் தீர்வுமுண்டு!


உண்மையும் உள்ளத்திலுண்டு

உளறலும் சங்கமிப்பதுண்டு!


உதட்டில் சிரிப்புண்டு 

உரிமையில் பொறுப்புண்டு!


உமிழ்நீரும் ருசிப்பதுண்டு

உவர்நீரும் இனிப்பதுண்டு!


உயிரோட்டமாக எவருண்டு

உயிரோவியமாகும் இணையர்களுண்டு!