உலகத்தின் முதல் மொழி அம்மா

Su.tha Arivalagan
Aug 17, 2026,01:40 PM IST

- டிலாணி ஸ்ரீதரன்


அட்சய பாத்திரத்தில் தித்திக்கும்  அமிழ்தம்!

ஆழியென ஓய்வில்லாமல் துடிக்கும் இதயம்!


இமையென காக்கும் இகத்தின் இன்பம்!

ஈகையென இடைவிடாது கிடைத்திடும் அன்பும்!


உயிர்களென படைக்க நகலாக்கினான் பிரம்மனும்!

ஊட்டச்சத்தென உடம்பில் சொத்தானது உதிரமும்!


என்புகளும் தாயின் அரவணைப்பில் வலுவிழக்கும்!

ஏட்டுக்கல்வியும் இயம்பும் தாலாட்டில் பொலிவிழக்கும்!


ஐங்குரவர்களின் ஆட்சியும் அன்னையின் மாட்சியாகும்!

ஒழுக்கத்தின் பிறப்பிடமும் ஆத்தாவின் கருவறையாகும்!


ஓங்கிடும் புகழும் வலிகளின் உறைவிடமாகும்!

ஒளடதமாகும் மூலிகையின் முதலிடமவர் வாய்மொழியாகும்!




அஃதே அகராதியிலும் தேடப்படும் அர்த்தமாகும்!


உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் உயிர்மெய்யுமான உருவகமாகும்!

பிரபஞ்சத்தின் நுட்பமான விழியே பிரசவமாகும்!