மதியொளி முகமோ!
Jun 09, 2026,10:40 AM IST
- டிலாணி ஸ்ரீதரன்
விழி காணாத மேக ரதமோ?
வழி மாறாத தாள லயமோ?
மொழியாகிய இயலோ, இசையோ, நாடகமோ?
கவி சேராத எதுகை மோனையோ?
சுருதி தேடாத ஊமை பாடலோ?
கலையாத கனவோ அழகு சிலையோ?
காதலாக நுழைய இதய அறையோ?
விடை தெரியாத வினாவான விடியலோ?
நீயொரு மதியொளி முகமோ மணாளனே.