அரசு மரியாதையுடன் நாளை இயக்குநர் பாக்யராஜின் உடல் தகனம்

Su.tha Arivalagan
Jun 27, 2026,01:58 PM IST

சென்னை : மறைந்த இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜின் உறுதிச்சடங்குகள் நாளை பிற்பகல் நடைபெறும் என்றும், அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முக திறமை கொண்ட கே.பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்த நிலையில், அவரது உடலுக்கு முதல்வர் விஜய், நடிகர் ரஜினிகாந்த், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் பாக்யராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.




இந்நிலையில் மறைந்த கே.பாக்யராஜ் உடல் நாளை பிற்பகல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் தமிழ் சினிமாவிற்கு அவர் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில் கே.பாக்யராஜின் இறுதி சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.