தாலி இவ்ளோ அசிங்கமா காமிச்சது சரியில்ல: இயக்குனர் கே. பாக்கியராஜ்

Meenakshi
Nov 18, 2025,03:26 PM IST

2019ம் ஆண்டு கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். அதன்பிறகு லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்து வரவேற்பை பெற்றார்.


எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்த இந்தப் படம் ரூ.100 கோடி வசூலித்தது. அதன்பிறகு வெளியான டிராகன், டியூட் படங்களில் நடித்து அடுத்தடுத்து ரூ.100 கோடி வசூலை கொடுத்து கவனம் பெற்றார் இயக்குநர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தொடர்ச்சியாக மாபெரும் வெற்றிகளைப் பெறுவதுடன், வசூலிலும் சாதனைகளைப் படைத்து, ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.




இந்த நிலையில், டியூட் படம் குறித்து இயக்குனர் கே.பாக்கியராஜ் வெளியிட்ட பதிவில், டியூட் படத்துல தாலி விட பொண்ணுக்கு ஃபீலிங்ஸ் தான் முக்கியம்னு ஒரு வசனம் வரும் அந்த வசனம் யார் எழுதினான்னு தெரியல. ஒரு பொண்ணு கல்யாணத்துக்கு முன்னாடி நிறைய பேர் மேல் ஆசைப்பட்டு இருந்தா கூட, பையனும் ஆசை பட்டிந்தா கூட, அந்த பொண்ணு கழுத்துல தாலினு ஒன்னு வரும் போது இரண்டு பேரும் அவங்க கடந்த காலத்தை சுத்தமா அழிச்சிட்டு ரெண்டு பேர் மட்டும் நீ எனக்கு நான் உனக்கு அப்படின்னு வருவாங்க. அதற்கு காரணம் அந்த ஒரு தாலி. அந்த தாலிய இவ்ளோ அசிங்கமா காமிச்சது எனக்கு சரியில்ல என்று தெரிவித்துள்ளார்.