அஜித் கூறியதை நான் வாழ்நாளில் மறக்க மாட்டேன்.. சிலிர்த்துப் பேசிய இயக்குனர் மகிழ் திருமேனி
சென்னை: அஜித் கூறியதை என் வாழ்நாளில் எப்போதும் மறக்கமாட்டேன் என்று விடாமுயற்சி பட இயக்குனர் மகிழ் திருமேனி தெரிவித்துள்ளார்.
லைகா நிறுவன தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்திருக்கும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தில் ஆரவ் அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா கசான்ட்ரா, நிகில் நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஓம் பிரகாஷ்சும்,படத்தொகுப்பினை என்.பி.ஸ்ரீகாந்த்தும் மேற்கொண்டுள்ளனர்.
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கிய படங்கள் அனைத்தும் ஆக்ஷன் த்ரில்லர் படங்களாகும். அந்த வகையில் விடாமுயற்சி திரைப்படம் தன்னடைய வழக்கமான படமாக இருக்காது என அவரே தெரிவித்துள்ளார்.விடாமுயற்சி படத்தின் ப்ரோமோஷனுக்காக மகிழ் திருமேனி பல நேர்காணல்களில் கலந்து கொண்டு வருகிறார். இதில் படம் பற்றியும் அஜித் உடன் பணியாற்றிய அனுபவம் பற்றியும் அவர் நிறைய பகிர்ந்து கொண்டு வருகிறார். மேலும், அஜித் குறித்து இயக்குனர் மகிழ் திருமேனி பேசுகையில்,
RACE-ல் பங்கேற்கப்போவதை அஜித் சார் முன்கூட்டியே சொல்லிவிட்டார். ரேஸில் என்ன வேண்டுமானாலும் ஆகலாம். அதனால் தான் என்னை நம்பி பணம், உழைப்பை போட்டுள்ள அனைவருக்காகவும் 2 படங்களையும் முடிக்க வேண்டும் என நினைத்தேன்.ரேஸிற்கு செல்லும்போது நான் 100 சதவீதம் ACCELERATOR-ஐ அழுத்த வேண்டும்.
எனக்கு 2 படம் இருக்கு,COMMITMENT இருக்கு என நினைத்து 90 சதவீதம் மட்டும் அழுத்தினால், நான் ரேஸிற்கு உண்மையாக இல்லை என்பது போல ஆகிவிடும் எனக் கூறினார். அவரின் இந்த வார்த்தையை இப்போது நினைத்தாலும் சிலிர்க்கிறது. இதை வாழ்நாளிலும் நான் மறக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்