ஏங்க! தீபாவளிக்கு முறுக்கு சுடலான்னு இருக்கேன்.. நான் கடைக்கு போயி சுத்தியல் வாங்கிட்டு வந்திடுறேன்
Oct 17, 2025,05:01 PM IST
தீபாவளி என்றாலே ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் தான் குட்டீஸ்களுக்கு. அதற்கு எதிர் மாறாக தான் இருக்கும் அப்பாக்களின் நிலை. இப்படி இரு வேறு பட்ட நிலையில் இருந்தாலும் தீபாவளியை வரவேற்காத ஆட்களே இல்லை என்றே சொல்லலாம். புதுத் துணி, ரகரகமாய் பட்டாசு, விதவிதமாய் பலகாரங்கள் என வருடத்திற்கு ஒருமுறை வரும் தீபாவளிக்காக காத்திருக்காத ஆட்களே இல்லை. எப்படியே ஒரு வழியாக தீபாவளிக்கு ரெடியாகிக் கொண்டிருக்கிறோம்.
இந்த நிலையில், ஒவ்வொருவரின் மன நிலையை வெளிப்படுத்த வந்தது தான் மீம்ஸ். யாரையாவது கலாய்க்க வேண்டுமா? போடு மீம்ஸ்சை. ஏதாவது விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமா? போடு மீம்ஸ்சை. உங்களுடைய மனநிலையை தெரிவிக்க வேண்டுமா? போடி மீம்ஸ்சை. என்று மீம்ஸ்களை உருவாக்கி, இணையதளத்தில் உலாவ விடுகின்றனர் நம் இணைய வாசிகள். இந்த நிலையில் தீபாவளிக்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் பட்சத்தில், இதை சுட்டிக்காட்டும் விதமாக தீபாவளி மீம்ஸ்கள் தற்போது சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து விட்டன. அப்படியாக இணையத்தில் அதிகமாக, வைரலான மீம்ஸ்களை இங்கே பார்க்கலாம்...
ஏங்க! தீபாவளிக்கு முறுக்கு சுடலான்னு இருக்கேன்...
ஆஹா இவன வச்சே இந்த தீபாவளிய கொண்டாடிலாம்...
தீபாவளி போனஸ் எப்படி, சம்பளத்தோட வருமா...
அண்ணே தீபாவளி போனஸ் எப்ப குடுப்பீங்க...
தீபாவளி அலப்பறை...
ஓ... நாளைக்கு ஊருக்கு போகபோறியா?...
இந்த தீபாவளி வராமலே இருந்திருந்தா நல்லாயிருக்கும்...
எங்களுக்கு தீபாவளி கிடையாதுங்க...