அண்ணாமலை மற்றும் தவெக குறித்து விமர்சிக்க வேண்டாம்: அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுறுத்தல்!

Meenakshi
Aug 30, 2025,03:54 PM IST

சென்னை:  அண்ணாமலை மற்றும்  தவெக கட்சி குறித்து விமர்சிக்க வேண்டாம் என்று அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.


அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று அதிமுக தலைமைகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருகின்ற தேர்தல் 2026 குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், பல முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. 


இந்த கூட்டத்தின் போது, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குறித்து விமர்சிக்க வேண்டாம். அண்ணாமலை நம்மை பற்றி எதுவும் பேசுவதில்லை. நீங்களும் அவரை பற்றி எதுவும் பேச வேண்டாம் என்றும், அத்துடன் கூட்டணி குறித்த சலசலப்பை ஏற்படுத்த தேவையற்ற விவாதங்களை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளதாகவும், 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை மேலும் வேகப்படுத்துமாறும் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.




அத்துடன் புதிதாக கட்சி தொடங்கியவர்கள், கட்சி வளர்ச்சிக்காக எதையாவது பேசுவார்கள் என்பதால் தவெக தலைவர் விஜய் பேசுவதை கண்டுகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என அதிமுக நிர்வாகிகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.