திரைமாயையில் வீழாதே!

Su.tha Arivalagan
Jan 21, 2026,10:55 AM IST

- இரா. காயத்ரி


மனிதா!

அலைபேசி திரைமாயையில் வீழாதே

அதிகார வன்முறையில் ஈடுபடாதே


மனிதா !

ஆறறிவுக் கொண்டும் சதிசெய்யாதே

ஆத்திரத்தில் எல்லை மீறாதே


மனிதா !

இவ்வுலகம் யாவர்க்கும் சமமே

இன்னல் கொடுத்து வாழாதே


மனிதா !

ஈதல் ஒன்றே சிறந்ததே

இங்கிதம் அறியாமல் பேசாதே




மனிதா !

உள்ளத்துள் நல்லதாக எண்ணுவதே

ஊரையும் உன்னையும் உயர்த்திடுமே


மனிதா !

கற்பனை திரைமாயையில் வீழாதே

கண்டதையும் தேடி போகாதே


(இரா.காயத்ரி, ஆசிரியர், தருமபுரி மாவட்டம்)