பொய் பேசக்கூடாது காதலி!

Su.tha Arivalagan
Jul 15, 2026,12:28 PM IST
-பாவலர் மாயோன்மங்கை

ஆண்

கும்பகோணம் வெத்தலையே
குங்குமத்துச்
செவப்பே

கொங்கு நாட்டுச்
செவ்விளநீ
கொஞ்சு தடி உன்
வனப்பு

சிறுவாணி நதி
ஓரம்
சினுங்கி வரும்
சிரிப்பே

சித்தகத்திப் 
பூ விழியே
அத்தெமகென்
எனக்கே



மை பூசும்
கண்ணிரண்டும்
பொய் பேச
வேண்டா

மச்சானெ 
வெண்டானுன்னூ
மயங்க
வைக்க லாமா

நவாப் பழ
நிறத்தழகி
நாங்கருத்தும்
போனேன்

நல்ல சேதி
சொல்லாமெ
நீ
தூங்க லாமா

பெண்

தஞ்சை மண்
அழகா
தலப்பாக்
கட்டழகா

வேண்டானு
சொல்லலயே
விலகி நானும்
போகலயே

உன்னவிட்டா
உசுரப்போல
என்னப்
பார்ப்பதாரு

உச்சந்தலை
முத்தமாக
நான் தருவேன்
நூறு!