பாரதி பாவாணர் செந்தமிழ் வானம் 4ம் ஆண்டு விழா.. முனைவர் லதாவின் 3 நூல்கள் வெளியீடு
சென்னை: பாரதி பாவாணர் செந்தமிழ் வானம் நடத்திய நான்காம் ஆண்டு விழாவில் பாரத் சேவா ரத்னா முனைவர் லதா, கல்வித் தூதர் மரபு பாவலர் எழுத்தாளர் தமிழக அரசின் மாநில நல்லாசிரியர் விருதாளர் உலக செந்தமிழ் சங்கம் நிறுவனர் எழுதிய மூன்று கவிதை தொகுப்பு நூல்களை வெளியிட்டார்.
சமூக தேனீக்கள் பாகம் ஒன்று 132 கவிதைகளையும், சமூக தேனீக்கள் பாகம் 2 கவிதை நூலில்132 கவிதைகளையும், தமிழ் மறையின் கவிதை என்னும் கவிதை நூலில் நூற்று அறுபது கவிதைகளையும் உள்ளடக்கிய நூலாக வெளியிடப்பட்டது.
நிகழ்வானது ஜெயராம்ஸ் கலை அறிவியல் கல்லூரி, கரூரில் ஜெயராம்ஸ் கல்லூரி முனைவர் வெளியிட நூலினை பாரதி பாவாணர் செந்தமிழ் சங்கம் நிறுவனர் சோலைராஜா அவர்கள் பெற்றுக் கொண்டார்.
நிகழ்வில் விழா குழு தலைவர் செல்வி சேகர் அவர்களும் ஒருங்கிணைப்பாளர்கள் நாகார்ஜூன் தினேஷ் மற்றும் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் வெங்கடேசன் மற்றும் கலைவாணி முன்னிலையில் வெளியிடப்பட்டது. பாரதி பாவா நகர் செந்தமிழ் வானம் நிறுவனர் திரு சோலைராஜா அவர்கள் படைப்புச்சுடர் விருது வழங்கி கௌரவித்தார் தமிழ் அமைப்பு சார்ந்த நிறுவனர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் ஆல் இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் நிறுவனர் வெங்கடேசன் கலைவாணி மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதி பவானி செந்தமிழ் வானத்திலிருந்து ஏழு பல்துறை விருதுச் சான்றிதழ்கள் மற்றும் உளவே உயர்வு என்னும் தொகுப்பு நூலில் கவிதை எழுதியதை பாராட்டி விருது சான்றிதழும் புத்தகமும் வழங்கப்பட்டது. மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு 100 நாள் கருத்தரங்கில் ஒரு மணி நேரம் மாண்புமிகு இந்திரா காந்தி அவர்களைப் பற்றி கருத்துரை வழங்கியமையை பாராட்டி ஆல் இந்தியா புக்கா ரெக்கார்ட்ஸ் கண்காணிப்பில் உலக சாதனை சான்று பாரதி பாவாணர் செந்தமிழ் வான விருதுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
பெண்ணை வெல்க வென்று கூத்திடுவோம் என்ற தொகுப்பு நூலில் இந்திரா காந்தி அம்மையாருடைய கருத்துரை தொகுப்பு கட்டுரை நூலாக வெளியிடப்பட்டது.. பெண்மை எனும் பேராற்றல் என்னும் தொகுப்பு நூலில் இவர் எழுதிய கவிதை இடம் பெற்று விருது சான்றிதழும் புத்தகமும் வழங்கப்பட்டது. வேலூர் முத்தமிழ் சங்கம் நிறுவனர் மதிப்பிற்குரிய கலைவாணி அவர்கள் செந்தமிழ் சுடர் விருது கேடயமும் சான்றிதழும் வழங்கி சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. தாய்மொழி உறவுகள் நிறுவனர் பிரின்ஸ் அவர்கள் கலைஞர் விருதுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்