அறியாமை பூட்டிட வகுப்பறை திறப்போம்!

Su.tha Arivalagan
Jun 03, 2026,03:22 PM IST

- முனைவர் கோ. லதா


இருளை அகற்ற இதயம் திறக்க

இலக்கணம் கற்க இளமை எழுக

அறியாமை என்னும் பூட்டை உடைக்க

அருமை வகுப்பறை வாயில் திறப்போம்


ஏடு பிடித்து எழுத்தை கற்போம்

ஏணி போலே  உயர்வை தொடுவோம்

ஆசான் உரைக்கும் அமுத மொழியால்

ஆணவம் தீரும் அறிவு விளங்கும்




புத்தகம் கையில் புலமை பெருகும்

புறக்கணிப்பு எல்லாம் போக்கி விடும் 

சிறுவர் முதலாய் சிந்தை தெளிந்து

சிறப்பு வாழ சிறகை விரிப்போம்


கல்லாமை கெடுக்கும் காலம் மாறும்

கல்வியே செல்வம் கண்ணாய் மிளிரும்

அறியாமை பூட்டிட வகுப்பறை திறந்து

அனைவரும் உயரிய அன்பை விதைப்போம்


(பாரத் சேவா ரத்னா. டாக்டர். கோ. லதா,  கல்வித் தூதர், பன்முக உலக சாதனையாளர், தமிழக அரசின் நல்லாசிரியர் விருதாளர்,  சென்னை)