மகிழ்ச்சி பெருகட்டும்.. செல்வம் குவியட்டும்.. ஆரோக்கியம் நிறையட்டும்!

Su.tha Arivalagan
Nov 08, 2026,01:55 PM IST

- டாக்டர் எஸ்.மணிமேகலை

அன்பு எனும் அகல் விளக்கெடுத்து
ஆற்றல் என்னும் எண்ணெய்விட்டு

சுற்றம் சொந்தம் என்னும் திரிகள் போட்டு
பந்தம் எனும் கனலால் ஒளி ஏற்றி

நட்பு வட்டத்துடன் அகமது மகிழ்ந்து
நலமுடன் இறைவனை பாடி நெகிழ்ந்து

தித்திப்பு பலகாரம் பகிர்ந்து உண்டு
பட்டாடை கட்டி பட்டாசு வெடித்து




பாங்குடனே பாசமாய் இந்நாளில் கூடிடுவோம்
பாந்தமாய் பலரோடும் தீபாவளியை கொண்டாடிடுவோம்

தீபாவளி திருநாளில்
மகிழ்ச்சி பெருகட்டும்

செல்வம் குவியட்டும்
ஆரோக்கியம் நிறையட்டும்

மங்களங்கள் சேரட்டும்
மனங்கள் மகிழ்வால் பூரிக்கட்டும்

மனத்தில் இனிமையை நிறைப்போம்
நினைவில் இனிமையை நினைப்போம்

வண்ணமயமான தீபாவளியே உன்னை வணங்குகிறேன்
வரும் வருடம் உன்னை எதிர்நோக்கி காத்திருப்பேன்

(கவிதாயினி டாக்டர் எஸ் மணிமேகலை. செட்டிநாட்டை சேர்ந்த இவர் மதுரையில் பிறந்து வளர்ந்து இன்று ஈரோட்டில் சிறந்த அக்குபஞ்சர் மருத்துவராக உள்ளார். மருத்துவம் தவிர்த்து ஆன்மீக சொற்பொழிவு இசை கலை ஓவியத்திறமை மற்றும் பாடும் புலமை மிக்கவர். சிறந்த கவிஞர், எழுத்தாளர். நமது தென் தமிழ் இணையதளத்தில் ... மணிமா .. என்ற பெயரில் செட்டிநாட்டு ரெசிபி எழுதிக் கொண்டிருக்கிறார். தனது பத்தாவது வயதில் மறைந்த கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் அவர்களிடம் மதுரையில் கவிதாயினி என்ற பெயர் சூட்டப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது)