கலைவாணி சுகபாணி!

Su.tha Arivalagan
Oct 19, 2026,03:14 PM IST

- கவிதாயினி டாக்டர் எஸ். மணிமேகலை, ஈரோடு


கலைகளின் ராணி 

அம்மா கலைவாணி


வீணையின் ராணி 

அம்மா சுகபாணி


கல்விக் கடலில் கண் திறந்தாய்

கற்கும் திறமை வளர்த்து விட்டாய்


அறிவுக்கண்ணும் திறந்து வைத்தாய்

அமுதம் பருகிட அள்ளித் தந்தாய்




கலைமகளே எனது நாவினில் அமரும் அம்மா

சில பல கலைகள் கற்று தேறிடுவேனம்மா


கவலைப் போக்கி இன்பம் தருவாய் அம்மா

கற்றதெல்லாம் பாரினில் சிறக்க வையம்மா


மகிழ்வுடன் பழம் பலகாரம் படைத்திட்டேனம்மா

கனிவுடன் ஏற்று நீ அருள்வாய் அம்மா


கை கூப்பித் தொழுகின்றேன் அம்மா கலைவாணி

கருணை தெய்வமம்மா நீ சுகபாணி


(கவிதாயினி டாக்டர் எஸ் மணிமேகலை. செட்டிநாட்டை சேர்ந்த இவர் மதுரையில் பிறந்து வளர்ந்து இன்று ஈரோட்டில் சிறந்த அக்குபஞ்சர் மருத்துவராக உள்ளார். மருத்துவம் தவிர்த்து ஆன்மீக சொற்பொழிவு இசை கலை ஓவியத்திறமை மற்றும் பாடும் புலமை மிக்கவர். சிறந்த கவிஞர், எழுத்தாளர். நமது தென் தமிழ் இணையதளத்தில் ... மணிமா .. என்ற பெயரில் செட்டிநாட்டு ரெசிபி எழுதிக் கொண்டிருக்கிறார். தனது பத்தாவது வயதில் மறைந்த கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் அவர்களிடம் மதுரையில் கவிதாயினி என்ற பெயர் சூட்டப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது)