ஓ பெண்ணே வெற்றி காண வெளியே வா!
Mar 08, 2026,12:16 PM IST
- கவிதாயினி டாக்டர் எஸ்.மணிமேகலை ஈரோடு
முள்ளும் ஒரு நாள் மலராகும்
முடிவும் ஒரு நாள் சுகமாகும்.
தோல்வியை கண்டு துவண்டு விடாதே
தோல்வியே வெற்றிக்கு பாலம் தானே ...
நாம் பெரும் தோல்வி ஒவ்வொரு படிக்கல்
நாம் பெரும் வெற்றி வாழ்க்கையின் உரைகல்....
துவண்டால் மனமும் நொறுங்கிவிடும்.
தூக்கம் கெட்டே நொந்து விடும்.
உறுதி மட்டும் உள்ளத்தில் வைத்தால்
உயர்வோம் விண்ணை முட்டும் வரை ..
போராட்டம் தான் வாழ்க்கையின் பாதை
போராடி கடப்போம் இலக்கின் பாதை.
முயன்று முடிப்போம் இலட்சியப் பாதை
முடிவில் கிடைக்கும் வெற்றிப்பாதை.
அயராது தளராது முயன்றிடுவோம்
அஞ்சாது துணிந்து முன்னேறுவோம்
புரியாத கூட்டம் தடை போட்டால்
புரிந்தே தடை கற்களை உடைத்தெறிவோம்.
சாதிக்க நம்மால் முடியும் முடியும் முடியும் முடியும்
சகலமும் நம்மிடம் வந்தடையும்
முள்ளும் ஒரு நாள் மலராகும்
முடிவும் ஒரு நாள் சுகமாகும்!