விடிந்தும் விடைபெற மனமில்லா மதி!
- முனைவர் தி.தங்கலட்சுமி
கார் மீது பயணிக்கும்
கார்கால நத்தை
இளங்காலைப் பொழுதில்
இள நத்தையின் இன்னுலா!!
மெல்லுடல் மேனி கொண்ட
மென்னகர் உயிரி!
உணர் கொம்பு கொண்டு
ஊர்ந்திடும் உயிரி!
--
விடிந்தும் விடைபெற மனமில்லா மதி!
நேரங்கடந்தும்
நகரா நிலா!
அருணன் உதித்தும்
அயரா அம்புலி!
விடியலின் அழகை
ரசித்து நிற்கும்
வெண்ணிலவு!
இளஞ்சூரிய
ஒளியில்
இயற்கை எழிலை
இமை கொட்டாது
இரசித்திடும்
இளஞ்சந்திரன்!
--
மின்கம்பத்தில் கூடு!!
இந்த அழகிய மின் கூட்டு வீடு!?!
(முனைவர் தி.தங்கலட்சுமி, எங்கும் நீக்கமற நிறை ஈசனின் திருவருளால் கல்விக்கண் தந்த பெருந்தலைவர் அவதரித்த விருதை மண்ணில் வசிக்கும் பாக்கியம் பெற்றவர். பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் ஆனந்தப் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்.)